சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை வீசினால்
சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம் வசூலிக்க திட்டம்! பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எறிந்தால் அபராதம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில், தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு ஓட்டம், பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து, ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். எனது குப்பை எனது பொறுப்பு என்று இருந்தால் தான் நகரம் தூய்மையாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், பொறுப்பில்லாமல் குப்பைகளை தூக்கி எறிந்தால் அபராதம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குப்பை கழிவுகள் அதேபோல், தனிநபர் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலும், அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தார். 90 நாட்கள் கால அவகாசத்திற்கு பின் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். -MMH
Comments