போதைப் பொருள் விற்பனை ஜோர்


பொள்ளாச்சி நகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா,பான்மசாலா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் சர்வசாதாரணமாக குறிப்பிட்ட சில கடைகளில் கிடைத்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்.பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்கும் கடைகளை கண்டறிந்து அவர்களது உரிமைகள் பறிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி அன்று பொள்ளாச்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை பொருட்படுத்தாமல் பல கடைகளில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இந்த புகையிலை பொருட்கள் தயாரிக்கப்படுவது தமிழகத்தில்தான் என்று செய்தியும் பரவி வரும் நிலையில். அதை உறுதி செய்யும் வகையில்.



கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்களை கேரளா எல்லை பகுதியான நடுப்புணி கேரளா செக்போஸ்டில் வைத்து பிடிக்கப்பட்டது. மினி டிப்பர் லாரியில் தேங்காய்கள் வைத்து மறைத்து 9800 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பிடிக்கப்பட்டது இதன் மதிப்பு 40 லட்ச ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மது புகை மற்றும் புகையிலை பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற நல்ல சிந்தனையோடு.


நாளைய வரலாறு


M சுரேஷ் குமார் பொள்ளாச்சி.                                                                         -MMH


Comments