பிரிவினையைத் தூண்டுவதாக பாஜக வேட்பாளர்
சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த டெல்லி பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின் பிரிந்து சென்ற கபில் மிஸ்ரா தற்போது பாஜக வேட்பாளராக டெல்லியில் போட்டியிடுகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் (India vs Pakistan) எனக்குறிப்பிட்டு டெல்லி தேர்தல் தேதியைக் குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவு மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து அவரின் பதிவை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கும், கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கும் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-MMH
Comments