வெடி குண்டு வீசிய RSS அமைப்பை


கோவை: கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள கதிரூரில் ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பைச் சேர்ந்தவர்காவல்துறையின் சோதனைச்சாவடி மீது வெடி குண்டு வீசிய சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்தநிலையில் கேரள தனிப்படை போலீசார் இன்று கோவையில் அவரை கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதி பெரும்பாலும் பதட்டமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் கடந்த 16ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள போலீசாரின் சோதனைச் சாவடி மீது மர்மநபர் ஒருவரால் குண்டு வீசப்பட்டது. இதில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அச்சம்பவம் தொடர்பாக போலீசார்வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் மூலம் அடையாளம் கண்டதில்தாக்குதல் நடத்தியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பிரபேஷ் என்பது தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து கேரள தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவைக்கு விரைந்த போலீசார் இன்று பிரபேஷை அவர் உறவினர் வீட்டில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சொந்தமான மனோஜ் சேவா கேந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அப்பகுதியில் மோதலை உருவாக்க முயற்சித்து வெடிகுண்டை வீசியதாகவும், அது எதிர்பாராத விதமாக போலிஸாரின் சோதனைச் சாவடி மீதுவிழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதையடுத்து தலச்சேரி நீதிமன்றத்தில் பிரபேஷை ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                        -MMH


Comments