கொரோனா வைரஸ்


லகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து இன்று உலக நாடுகள் முழுவதும் உயிர் ஆபத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று காலை வரை 45 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று 2000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பாதித்துள்ள இந்த வைரஸ் முக்கியமாக 13 நாடுகளைத் தாக்கியுள்ளது. சீனாவின் உவானா மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸ் உலக நாடுகளை மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.


கொரோனா வைரஸுக்கான காரணம் என்ன?


கொரோனா வைரஸுக்கான காரணத்தை ஆராய்ந்த பொழுது உலக சுகாதார அமைப்புகள் மிரண்டு போயுள்ளனர். அதாவது சீனாவில் , மனிதர்கள் உண்ணாத தடைசெய்யப்பட்ட அனைத்து விதமான மாமிசங்களும் உண்ணப்படுகின்றன. அதிலும் பாம்பு, தவளை, பல்லி, முதலை, எலி, குரங்கு என அனைத்து வகையான உயிரினங்களும் உண்ணப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாம்பு இறைச்சி மூலமே தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பும், சீனாவின் மருத்துவ அறிக்கையும் குறிப்பிடுகின்றது.


இந்த வைரஸ் பரவிய உவானா மாகாணம் தற்பொழுது மூடப்பட்ட நகரமாக மாற்றப்பட்டுள்ளது. எந்தவித வெளி தொடர்பும் இல்லாமலும், உள்ளிருந்து யாரும் வெளியேற முடியாத வகையிலும் வெளியிலிருந்து யாரும் செல்ல முடியாத வகையிலும் இந்த மாநிலம் மூடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 11 மில்லியன் மக்கள் வாழும் நிலையில் அவர்களின் நிலை கவலைக்கிடமான நிலையாகவே காணப்படுகின்றது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதற்கு மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இதுவரை ஒரு மருத்துவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.


சீனாவில் பல இலங்கையர் வாழ்வதுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உவானா மாகாணத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட இலங்கையர் வாழ்கின்றனர். அவர்களின் நிலையும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.... இலங்கையிலும் உலக நாடுகளிலும் சீனத்தயாரிப்பு இல்லாத இடமே கிடையாது. அதே போன்று சீன மக்கள் வாழாத நாடும் கிடையாது. எனவே சீனா மற்றும் சீனாவிலிருந்து வருபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் ஐநா எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து வரும் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் தொடர்ச்சியாக 18 மாதங்கள் தொடருமாயின் 65 இலட்சம் பேர் உயிர் இழப்பர் என அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகின்றது. இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!!! இலங்கையிலுள்ள இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நேற்று இருவரும் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சீன நாட்டவர், ஒருவர் இலங்கையர்.. விலைமதிப்பற்ற உயிரை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம்..? பயத்தில் மக்கள் உறைந்து நிற்கின்றனர்.


உறைய வைக்கும் அவசரச்செய்தியுடன்,


Ln. Indradevi Murugesan,kovai.                                                                                              -MMH


Comments