நாட்டிற்காக இரு கால்களை இழந்த
கார்கில் போரில் வெற்றியை பெருமை கொள்ளும் அதே சமயத்தில் நம் நாட்டிற்காக இரு கால்களை இழந்த மேஜர் மற்றும் தேவேந்திர பால் சிங். இன்றைய சமூதாய சிந்தனையாக ஓய்வு பெற்ற இராணுவ வீரரின் பதிவு இது இளைஞர்கள் சினிமா ( திரைப்படம்) அரசியல் கட்சினரின் ஏகபோக பேச்சுகளை பல மணி நேரம் செலவழித்து அவற்றை கண்டு களித்துகொண்டு அதற்க்கு கமண்ட்ஸ் போட்டு கொண்டும் இருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி.
ஆனால் நமது நாட்டின் இராணுவ வீரர்கள் பற்றியோ அவரின் வாழ்க்கை முறை பற்றியோ அவர்கள் கடந்து வந்த பாதைகள் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை பார்ப்பதுமில்லை தேடுவதில்லை. நாட்டை பற்றியோ நாட்டை பாதுக்காக்கும் வீரர்கள் பற்றியோ தெரிந்துகொள்ளும் ஆர்வம் இன்றைய சமூதாய பிள்ளைகளிடம் இல்லாமல் போனதற்க்கு காரணம் நாம் என யாராவது ஒருவர் மீடியாவோ அரசியல் தலைவர்களோ பொது மக்களோ பெற்றோர்களோ பொருப்பேற்க்க இயலுமா... இவர்கள் யார் என தாங்களின் வீட்டு பிள்ளைகளிடம் கேட்டு பாருங்கள் பதில் வருமா என்றால் அதுவும் கேள்வி குறிதான்...?
ஆனால் இன்று ஸ்டாலின் சீமான் கமல் ரஜினி என்ன பேசினார்கள் என கேட்டால் பதில் உடனே கிடைக்கும். இன்றைய இளைய சமூகத்தினரின் பார்வையை மீடியாக்கள் கெடுத்து குட்டிசுவர் ஆக்கிகொண்டு இருக்கிறது என்பதை எப்பொழுது நாம் உணர்கிறோமோ அப்பொழுது தான் இந்த சமூக தலை நீமிர வாய்ப்பு கிடைக்கும்.
ஜெய் ஹிந்த் தாய் மண்ணே வணக்கம்.
-POLLACHI SURESH KUMAR. -MMH
Comments