CAA, NPR தொடர்பாக பிரதமர் விவாதம் நடத்த தயாரா


CAA, NPR தொடர்பாக பிரதமர் விவாதம் நடத்த தயாரா ? - அமித் ஷா கருத்துக்கு ப.சிதம்பரம் பதில் குடியுரிமை சட்ட திருந்த விவகாரத்தில், பிரதமர் மோடி விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருந்த விவகாரத்தில், பிரதமர் மோடி விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்கட்சிகள் தன்னுடன் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்துள்ளார் எனவும் இதைத்தான் கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல் எதிர்கட்சிகள், மாணவர்கள், சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.


மேலும், முன்பே தான் கூறியது போல் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக 5 விமர்சகர்ளுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா எனவும், விவாதத்தை மக்கள் நேரலையில் பார்த்து முடிவு எடுக்கட்டும் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளர்.                                                                                -MMH


Comments