வியோம் மித்ரா பெண் ரோபோ
இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி 2022ம் ஆண்டு 4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டமுள்ளது. இதை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தில் “வியோம் மித்ரா” என்ற பெண் ரோபோவை ஆளில்லா விண்கலத்தில் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பெங்களுருவில் நேற்று “மனிதர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வுகள், எதிகொள்ளும் சவால்களும், எதிகால தேர்வுகள்” என்ற தலைப்பில் அறிவியல் மாநாடு தொடங்கியது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள், மனித உருவிலான “வியோம் மித்ரா” என்ற பெண் ரோபோ சுகன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களுக்கு முன்பாக விண்வெளிக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வியோம் மித்ரா தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டது. பின்னர் தான் சுகன்யான் திட்டத்திற்க்காக தயாரிக்கப்பட்டுள்ள அரை மனித ரோபோ எனவும், மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படுகிறது எனவும், சுவிட்ச் பேனல் செயல்பாட்டிலும் ஈடுபடமுடியும் என்று ரோபோ தன்னை தானே அறிமுகப்படுத்தியது.
4 வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் போது இந்த ரோபோவையும் அனுப்ப திட்டமிட்டுள்ளார். விண்வெளி வீரர்களின் செயல்பாட்டை கண்காணித்து அவர்களின் செயல்பாடு சரியாக இருக்கிறதா என இந்த ரோபோ பரிசோதிக்கும். தேர்வு செய்யப்பட்ட ரோபோவை இம்மாத கடைசிக்குள் ரஷ்யா சென்று பயிற்ச்சியை தொடங்க உள்ளனர்.
எழுதி அனுப்பியவர்
எ.யாஸ்மின் சென்னை. -MMH
Comments