காவல் நிலையம் திறப்பது யார்
பாலக்காடு சித்தூர், மீனாட்சிபுரம் காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை - இந்த கட்டிடம் காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கல் நட்டி வெகு சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது. வேகமாக கட்டி முடிக்கப்பட்டது. இப்போது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் நிலையில் இந்த காவல் நிலையம் யார் தலைமை தாங்கி திறந்து வைப்பார்கள் என்ற பேட்டி நடைபெறுகிறது இந்த செய்தியை நம் ஏற்கனவே காவல் நிலையத்திற்கு காவல் தேவை என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந் நிலையில் மீனாட்சிபுரம் பால் உற்பத்தியாளர் சங்க திருமண மண்டபத்தில் காவல் நிலையம் வாடகைக்கு எடுத்து இயங்கி வருகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாடகை தரவில்லை என பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் இக்கட்டித்தை கலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை போலீசார் மறுத்து வருவாதாக மேலும் புகார் அளிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம். இந்த நிலையில் கேரளாவில் காங்கிரஸ்க்கும் கம்யூனிஸ்ட்க்கும் கருத்து ஒற்றுமை நிலவும் நிலையில் விரைவில் புதிய காவல் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மீனாட்சிபுரம் புதிய காவல் நிலையம் விரைவில் திறந்து வைக்கப்படும் என மீனாட்சிபுரம் காவல் நிலைய உயர் அதிகாரி திரு. ஆதாம்கான் அவர்கள் தெரிவித்தார்.
POLLACHI
-M.SURESH KUMAR -MMH
Comments