ஊழல் வாதிகளிடம் இருந்து ஊராட்சியை காப்பாற்றுங்கள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவரும் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வேட்பாளருமான திரு.M.P சக்திவேல் அவர்களிடம் நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழ் நடத்திய சிறப்பு நேர்காணல்.


கேள்வி<உங்களைப் பற்றி?


பதில்> என்னுடைய பெயர் M.P சக்திவேல் BA. மனைவி. காஞ்சனா தேவி. மகன். கோகுல்ராஜ் BE. வீடு மாரப்ப கவுண்டன் புதூர், ஊராட்சி, பொள்ளாச்சி தாலுகா,கோவை மாவட்டம். தொழில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில், தேவைக்கேற்ப வருமானம் உள்ளது, ஆகையால் பொருளாதாரம் மீது எனக்கு பெரிய நாட்டம் இல்லை .முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன்.


கேள்வி:  பொதுவாழ்வில் உங்கள் அனுபவம்?


பதில்> நான் இந்திய தேசிய காங்கிரசில் கடந்த முப்பது ஆண்டுகாலமாக இருந்து வருகிறேன், கட்சியில் பல பதவிகள் வகித்து உள்ளேன், தெற்கு மாவட்ட தலைவர் என்கின்ற முறையில், என்னால் முடிந்தவரை, சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். கிணத்துக்கடவு,பொள்ளாச்சி, வால்பாறை, இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளும் என்னுடைய எல்லைக்குள் இருக்கின்றது, இங்குள்ள நமது கட்சிக்காரர்களிடம் கேட்டால் என்னை பற்றி கூறுவார்கள். கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள நிர்வாகிகள் அனைவரிடமும் ஒரே மாதிரியான கருத்துக்கள்தான் நான் பகிர்வேன் அதனால் கசப்பான அனுபவங்கள் எனக்கு இல்லை .


கேள்வி: நீங்கள் போட்டியிடும் பதவி ?


பதில்> கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு எண் 16 என்ற பதவிக்கு.


கேள்வி: நீங்கள் போட்டியிடும் பகுதியில் தற்போது உள்ள நிலை என்ன ?


பதில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவுமே தீர்க்கப்படாமல் அரையும் குறையுமாக உள்ளது சரியான சாலை வசதி இல்லை, அதனால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது இதைப் பார்த்துக்கொண்டு எந்தக் குடிமகனும் பொறுத்துக்கொள்ள மாட்டார் மேலும் சாக்கடை வசதி, வளந்தாயமரத்தில் அரசு பொது ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சென்று பாருங்கள் மருத்துவமனை முன் வாசலில் சாக்கடை நீர் பீறிட்டு ஓடுகிறது மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அந்த சாக்கடையை கடந்து செல்வது பெரும் போராட்டமாக இருக்கிறது இதை எந்த ஆளும் கட்சி நபரும் கண்டுகொள்வதே இல்லை நான் குறை கூற வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை, இந்த அவல நிலை குறித்து வேதனைப் படுகிறேன். குடிநீர் பிரச்சனை அதிகமாகவே உள்ளது, மின்சார வசதி சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு மோசமாக உள்ளது தெரு விளக்குகள் சரியாக பராமரிப்பதில்லை, தெருவிளக்கு தேவை என்ற பகுதிகளில் அதற்குண்டான நடவடிக்கை எடுப்பதே கிடையாது. கழிப்பிட வசதி கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்குண்டான தேவையை மக்களிடம் புரிய வைக்க வேண்டும் மேலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கி மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.நான் தெரிவித்த அத்தனை பிரச்சனைகளும் இப்போதும் நமது பகுதியில் உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார், நமது மாவட்டத்திற்கு அமைச்சரும் இருக்கிறார், இருந்து என்ன பயன் இவர்களின் பார்வை எல்லாம் பணம் தான், எந்த டெண்டரில் அதிக லாபம் கிடைக்கும் என்று கணக்கிட்டு கொள்ளை அடிப்பதே கொள்கையாய் வைத்துள்ள இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் பேசி என்ன பயன். இத்தனை சீரழிவுகளும் தாங்கிக்கொண்டு இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


கேள்வி< நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?


பதில் நான் போட்டியிடும் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்,மீண்டும் இந்த கொள்ளை கும்பலிடம் அதிகாரத்தை கொடுத்து விடாதீர்கள் மேலும் இந்த கொள்ளை கும்பல் பல ஆசை வார்த்தைகள் கூறுவார்கள் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் அதைத் தருகிறோம் இதை தருகிறோம் என்று கூறி கில்லி கொடுத்துவிட்டு பிறகு அள்ளி எடுத்து செல்வார்கள் ஆகையால் உங்கள் பொன்னான வாக்கினை இவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள், மீண்டும் நமது பகுதி பின்னோக்கி சென்று விடும். ஆகவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.


கேள்வி: நீங்கள் வெற்றி பெற்றால் ?


பதில்> கண்டிப்பாக வெற்றி பெறுவது நிச்சயம் ஏன் என்றால் ஆளும் கட்சியினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் அதனால் கூறுகிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் அதுமட்டுமல்லாமல் நான் ஒரு விவசாயி மக்கள் படும் சிரமங்கள் எல்லாவற்றையும் நான் அறிவேன், மக்களுக்கு அத்தியாவசிய தேவை என்னவென்று ஆய்வுசெய்து அதன் பிறகு அந்தத் திட்டத்தை செயல்படுத்த அவசியமில்லை மக்களோடு மக்களாக உள்ள எனக்கு மக்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் தெரியும் அதனால் ஆய்வு என்பது அவசியமில்லை ,மக்கள் பிரச்சனையில் அதிகம் கவனம் செலுத்துவேன் நீர்நிலைகளை தூர்வாரி நீர்தேக்கத்திற்கு உண்டான முயற்சிகளை எடுப்பேன்,தெருவிளக்கு தேவை உள்ள இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் பிரச்சனைகளை முடித்துக் கொடுப்பேன்.எனது பகுதியில் எங்கெல்லாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை என்பதை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.சாக்கடை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர நெடுந்தூரம் கடந்து செல்லுமாறு சாக்கடைகளை அமைத்து நிரந்தர தீர்வு காணுவேன்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைய நடவடிக்கை எடுப்பேன். ஆரம்பப் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்துவேன். விவசாயிகளுக்கு என்னால் முடிந்தவரை விவசாய கடன் பயிர் கடன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். என்னால் முடிந்தவரை எனது பகுதி மக்களுக்கு சேவை செய்வேன்.எனக்கு தேவையான பொருளாதாரம் என்னிடம் இருக்கும் காரணத்தினால் எக்காரணம் கொண்டும் மக்களிடம் சுரண்ட மாட்டேன் கொள்ளையடிக்க மாட்டேன் மாறாக மத்திய நிதி மாநில நிதி திரட்டி என்னுடைய பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து கொடுப்பேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.


பொள்ளாச்சி M. சுரேஷ் குமார்.                                                                          -MMH


Comments