சூரிய கிரகணம் கர்ப்பினிப்பெண்கள் பார்க்கலாமா

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா 4 முழு சூரிய கிரகண நிகழ்வுகளையும் ஒரு வளைய சூரிய கிரகண நிகழ்வையும் சந்தித்திருக்கின்றது. பொதுவாக சூரிய கிரகண நிகழ்வின் போது மக்கள் வெளியே வரக்கூடாது.முக்கியமாக கர்ப்பினிப்பெண்கள் வெளியில் வரக் கூடாது.கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது. கிரகணம் முடிந்த பின் குளிக்க வேண்டும் என்ற மூடபழக்கங்கள் மர்ள் மத்தியில் நிலவி வருகின்றன. இன்றும் கூட இந்த பழக்க வழக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் நாடு அறிவியல் இயக்கம் 1980 ல் ஆரம்பிக்கப்பட்ட பின் மக்கள் மத்தியில் அறிவியல் பரப்பும் பணிகளை தீவிரமாக செய்து கொண்டு வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக சூரிய கிரகணத்தின் போது மக்களால் பின்பற்றி வரும் மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க அறிவியல் ரீதியான விளக்கங்களை தந்து நாடு முழுவதும் பரப்புரை செய்து கொண்டு வந்தது. இவ்வாறு செய்து வந்த பிரச்சாரத்தின் விளைவாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த லட்சக்கணக்காண மக்களை கடந்த இரண்டு சூரிய கிரகணங்களின் போது வெளியே கொண்டு வர முடிந்திருக்கிறது. தற்பொழுது வர இருக்கிறசூரியகிரகணத்தையும் வெளியே வந்து பார்க்க மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்த பெருமை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தையே சாரும். இந்த வருடம் 2019 டிசம்பர் 26 ஆம் நாள் மீண்டும் ஒரு முழு வளைய கிரகணம் தமிழ் நாட்டின் சில பகுதிகளில் தெரியவிருக்கிறது. இந்த கிரகணத்தை மக்கள் பாதுகாப்பாக பார்த்து மகிழ அனைவரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அன்புடன் அழைக்கிறது....


1.கிரகணம் என்றால் என்ன?       


கிரகணம் என்பது சாதாரணமாக வானில் நடக்கும் நிகழ்வு. அதாவது ஒரு பொருள் தொலைவில் உள்ள ஒரு பொருளிருந்து வரும் வெளிச்சத்தைப் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வெளிச்சத்தை ஒரு பொருள் கடக்கும் போது வெளிச்சம் வரும் பொருளை முழுமையாகவா அல்லது பகுதியாகவோ மறைக்கும். எந்த அளவுக்கு மறைக்கும் என்பது மறைக்கும் பொருளின் அளவையும் தூரத்தையும் பொறுத்தது.இதற்கு நாம் பல உதாரணங்களை சொல்ல முடியும். நாம் அரங்கில் படம் பாக்ர்கும் போது யாராவது குறுக்கே சென்றால் அவர்கள் தலை சினிமா திரையில் விழும் அதாவது புரஜெக்ட்டர் அறையில் இருந்து வரும் ஒளியை ஒருவர் தலை மறைத்து நிழல் விழுகிறது என்பதை நாம் எளிதாக புாரிந்துகொள்ள முடியும். இது போன்றது தான் கிரகண நிகழ்வும்.


2.கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது?


சாதாரணாமாக கோள்கள் எல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன. (நிலவும் தனது சுற்றுப் பாதையில் பூமியையும் பூமி தனது சுற்றுப்பாதையில் சூரிய னையும் சுற்றி வருவது போல)சில நேரங்களில் நிலவு அல்லது பூமி சூரிய வெளிச்சத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பது உண்டு. நிலவு பூமிக்கும் சூரிய னுக்கும் இடையில் நேர் கோட்டுப்பாதையில் அமையும் போது சூரிய கிரகணம் நடக்கிறது. அதே போல் சூரியன் பூமி நிலவு நேர் கோட்டுப் பாதையில் அமையும் போது பூமியின் நிழல் நிலவைமறைக்கும்.இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.


3.சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏன் ஏற்படுகின்றன?


பூமியும் நிலவும் சுயமாக ஒளி கொடுக்கக் கூடிய பொருட்கள் அல்ல. ஆனால் இவைகளால் சூரிய வெளிச்சத்தில் நிழல்களை உருவாக்க முடியும். சில நேரங்களில் இவற்றின் ஏதாவது ஒன்றின் நிழல் மற்றொன்றின் மீது விழும் போது சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த நிழல்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அந்தப் பொருளை மறைக்கும் பொழுது பகுதி அல்லது முழு சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன.


4.கிரகணங்கள் ஒரு வருடத்தில் எத்தனை முறை நடக்கும்?


அதிகப்படியாக ஒருவருடத்தில் ஏழு கிரகணங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றன. இதில் நான்கு அல்லது ஐந்து சூரிய கிரகணங்களும் இரண்டு அல்லது மூன்று சந்திரகிரகணங்களும் நடக்கும். அதே சமயம் ஒரு சந்திர கிரகணம் கூட நடைபெறாமலும் இருக்கும். குறிப்பு பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் சராசரியாக 360 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.


5.எல்லாக் கிரகணங்களையும் நாம் இருக்கும் இடத்தில் ஏன் பார்க்க முடிவதில்லை ?


பெரும்பாலான கிரகணங்கள் கடல்களிலும் மனித நடமாட்டமில்லா மலைப் பகுதிகள், மற்றும் வனப்பகுதிகள் மற்றும் பாலைவனங்களில் நடப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைகள், கடல்கள், ஆறுகள், பாலைவனங்களால் சூழப்பட்டிருக்கின்றன.


குறிச்சி


-A.ஈசா                                                                                                                         -MMH


Comments