பலாத்காரம் கொடூர பூசாரி சிக்கி உள்ளான்

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த புகாரில், பூசாரி ஒருவன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான் பள்ளி செல்லும் மாணவிக்கு 6 மாத சிசு பிறந்ததால் வெளிச்சத்திற்கு வந்த பலாத்கார கொடுமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சில மாதங்களாக வயிறு வீங்கிய நிலையில் வயிற்று வலி என்று கூறிவந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இறந்த நிலையில் 6 மாத சிசு ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, சிசுவின் சடலத்தை வீட்டில் ஒரு பகுதியில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். அந்த ஊரை சேர்ந்த ஒருவர் இதனை பார்த்து விட, பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட மாணவி, தினமும் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்வது வழக்கம். அப்போது, அங்கு பூஜை செய்யும் 48 வயதான பூசாரி ராஜ் என்பவன் மாணவியிடம் நகைச்சுவையாக பேசி கவர்ந்துள்ளான். ஒருநாள் கோவிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு, யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அழைத்து சென்ற பூசாரி, குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி வெளியில் சொன்னால் படிப்பு கெட்டுப் போய்விடும் என்று பூசாரி மிரட்டி அனுப்பியதாகவும், இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.                                                                                                     கொடூரன் பூசாரி ராஜு  >     


தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல பயந்து மறைத்துள்ளார் அந்த மாணவி. அதன் பின் கோவிலுக்கு செல்வதையும் மாணவி தவிர்த்துள்ளார். தன்னை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பூசாரி நல்லவன் போல அவ்வப்போது வீட்டிற்கு வந்து பார்த்து சென்றுள்ளான்.பாலியல் கொடுமைக்குள்ளான அந்த சிறுமியோ, தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்துள்ளார். அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டதால் 6 மாதத்திலேயே வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது.


இவருக்கு 22 வயதில் ஒரு மகனும், 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வெச்சிருக்கார் ராஜ்.. இதில் ஹைலைட் என்னவென்றால், சிறுமியின் நிலவரம் என்ன என்பதை அடிக்கடி தெரிந்து கொள்ளவும், தன்னை நல்லவன் போல காட்டிக் கொள்ளவும், அந்த வீட்டுக்கு சென்று எல்லாரிடமும் பேசிவிட்டு வருவாராம். வீட்டுக்கு பின்பக்கம் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் காணப்படுகிறது. இதையடுத்து பூசாரி ராஜை பிடித்த காவல்துறையினர், இந்த வழக்கில் அவன் தப்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த கொடுமையான சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர். பள்ளி செல்லும் சிறுமியை பலாத்காரம் செய்து தாயாக்கிய கொடூரன் பூசாரி ராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிறுமிகள் தங்கள் பெற்றோர் துணை இல்லாமல், நன்றாக பேசுகிறார் என நம்பி இதுபோன்ற நபர்கள் அழைக்கும் இடத்திற்கு தனிமையில் சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.


                                                                                                                                                  -MMH


Comments