கோவை பதட்டமான வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27ந் தேதி மற்றும் 30'ந் நடைபெறுகிறது இதில் ஊராட்சித்தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியகவுன்சிலர், மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிளில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 13 ஒன்றியகவுன்சிலர்கள் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27'ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 19 ஊராட்சியில் 162 வார்டுகளும் அவற்றில் 105 வாக்கு சாவடிகள் உள்ளது. இதில் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகள் பட்டியலை ஆனைமலை ஒன்றிய தேர்தல் அலுவலரும், ஒன்றிய ஆனணயாளருமான பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.


திவான்சாபுதூர் 6 பூத்துகள், கணபதிபாளையம் 4 பூத்துகள், சுப்பேகவுண்டன்புதூர் 4 பூத்துகள், காளியப்பகவுண்டன்புதூர் 2 பூத்துகள், சோமந்துறை 2 பூத்துகள், தென் சித்தூர் 2 பூத்துகள், பெத்தநாயக்கனூர் 2 பூத்துகள், ஐல்லிப்பட்டி 2 பூத்துகள் , அங்கலக்குறிச்சி 3 பூத்துகள், ரமணமுதலிபுதூர் 2 பூத்துகள் ஆகியவை பதற்றமானவை என்று கூறினார்.


இது கடந்த தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட காரணமாக இந்த வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி


நாளைய வரலாறு


சுரேஷ் குமார்                                                                                                              -MMH


Comments