பரிதாப நிலையில் சபாநாயகர் பாதை


பொள்ளாச்சி வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை, மற்றும் போக்குவரத்து நெரிசல், இதற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில முன் ஏற்பாடுகள் துவங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வால்பாறை ரோட்டில், வடக்கிபாளையம் ரோட்டில், ரயில்வே கேட்டுளை அகற்றி மேம்பாலம் காட்டி முடிக்கப்பட்டது. இப்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது பாலக்காடு ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பனி நடந்து வருகிறது.


       


-புகைப்படம் சதிஷ் குமார் பொள்ளாச்சி


இப்படி எல்லா பாதையிலும் மேம்பாலம் அமைத்த நிர்வாகம் மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரத்தில் மட்டும் ஏன் சுரங்க பாதை அமைக்கப்பட்டது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று வரை நிலவுகிறது. வாகன ஓட்டிகள் இந்த பகுதி வரும் போது மிகுந்த அச்சத்துடன் வருகிறார்கள். அதற்கு காரணம் சரியாக பரமரிப்பு இல்லை, அங்கே இங்கே எங்கு பார்த்தாலும் குண்டும் குழியிம் ஆன சாலை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. தமிழக சபாநாயகர், திரு பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் தொகுதியில் இப்படி அவல நிலையில் சாலைகள் உள்ளதை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள் மேலும் வாகன ஓட்டிகள் கூறுகையில் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றது சில நேரங்களில் உயிருக்கு உத்தரவாதம் அளிக்காத சாலையாக இது மாறிவிடுகிறது. சபாநாயகர் ஏன் இதை கண்டுகொள்வதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ரோட்டை அடிக்கடி புதுப்பித்து வரும் நிர்வாகம் நல்ல முறையில் ரோட்டை சீர்திருத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின்கோரிக்கை ஆகும். நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை...?


நாளைய வரலாறு


M.சுரேஷ் குமார்                                                                                                            -MMH


Comments