பைக் ரேஸ் ஒரே நாளில் 158 வாகனங்கள் பறிமுதல்
முக்கிய சாலைகளில் பைக் ரேஸ், ஒரே நாளில் 158 வாகனங்கள் பறிமுதல்கெத்து காட்டிய சென்னை போலீஸ்சென்னையில் சிறப்பு வாகனத் தணிக்கையின்போது, சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, R.K. சாலை, அண்ணா ரோட்டரி, சர்தார் பட்டேல் ரோடு ஆகிய சாலைகளில், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் அதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இனிவரும் காலங்களில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக, பைக் ரேஸ்சில் ஈடுபடும் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிசி பிரிவு 336 (அடுத்தவர் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் வண்ணம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டுவது) , பிரிவு 114 (தண்டனைக்குரிய குற்றத்தை செய்பவருடன் உடனிருந்து தானும் அதே செயலுக்கு துணையிருத்தல்) ஆகிய வெவ்வேறு பிரிவின் கீழ் இந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களில் பெரும்பாலனோர்பள்ளிகல்லூரிமாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிறிஸ்து மஸ், புத்தாண்டு போன்ற வருட இறுதி நாட்களில் சென்னையில் பெரும்பாலும் இதுபோன்று பைக் ரேசில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வந்தன. இது குறித்த புகார்கள் தமிழக போலிசாருக்கு வந்த வண்ணம் இருந்ததால் சிறப்பு வாகனத் தணிக்கையில் சென்னை போலீசார் ஈடுபட்டனர்.
வாகனப் பந்தயம் என்பது சர்வதேச அளவில் நுட்பமான விளையாட்டுகளில் ஒன்று. ஆனால், அதனை நகரத்தின் மையப் பகுதியில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த சம்பவம் அர்த்தமற்ற செயல் என்று சென்னை மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-MMH
Comments