காஷ்மீரின் மறுபக்கம்
காஷ்மீர் என்றாலே பரிதாபமும் பரிதவிப்புமே எற்படும் நிலைமாறி அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்றால் மிகையாகாது. இதற்க்கு காரணம் குங்குமப்பூ சாகுபடிதான். ஸ்ரீநகரில் 13கீமீ மேற்க்கு நோக்கி பாம்போர் நகரம், ஊதா நிற கம்பளம் விரித்ததை போல எல்லா இடங்களிலும் ரம்மியமான ஊதா நிற பூக்களால் அலங்காரமாக காட்சியளிக்கிறது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று இந்த உதிரிப்பூக்களை எடுத்து கூடைகளில் அள்ளி சென்று உலரவைத்து விற்க்கப்படுகிறது. இது சாதாரண பூக்கள் அல்ல. நம்ம ஊரில் இதை 1கிராம் ரூ.500 முதல் 1000 வரை விற்க்கப்படுகிறது இந்த குங்குமப்பூ உலகில் மிக விலை உயர்ந்த மசாலா பொருட்களில் இதுவும் ஒன்று. ஐம்பதாயிரம் பூக்களில் வெறும் 500கிராம் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. காஷ்மீர் தான் உலகில் சிறந்த குங்குமப்பூக்களை உற்பத்தி செய்கிறது. குங்குமப்பூ அடுப்பாங்கரை மட்டுமில்லாமல் பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அழகுசாதன பொருட்களில் சேர்க்கப்படும் ஒன்றாகும். இதன் உற்பத்தியை உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரபு நாட்டு கிச்சனில் பிரியாணி முதல் சுவையான இனிப்பு கீர் வரை குங்குமப்பூவை ருசி பார்த்தவர்கள் ஏராளம். அதுமட்டுமில்லை மூக பூச்சு, சோப், கீரீம் மற்றும் வாசனை திரவியம் தயாரிப்பில் குங்குமப்பூ இன்றியமையாததாக இருக்கிறது. காங் என்றழைக்கப்படும் குங்குமப்பூ தேநீர் அங்கு புகழ்பெற்றது. மூகலாயர்கள் இரானிலிருந்து எடுத்துவரப்பட்ட “கிரோகாஸ் சாடிவஷின்” மொக்குகளை நிலத்தில் நட்டப்பட்டு அதுவும் மண்வளத்துக்கு பொருந்தியதாகவும் அமைந்துவிட சாகுபடியை ஆரம்பித்தார்கள். அதுவே இவ்வுலகம் முழுவதும் படர்ந்து அதிகளவில் உற்பத்தியாகவும், மதிப்புமிக்கதாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் ஆமோக உற்பத்தியை பார்த்த இரானியனும், ஸ்பனிஷும் காஷ்மீரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு அவர்களை அச்சுறுத்தி உற்பத்தியை பாதிக்கு பாதி விலையில் விற்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கடந்த பல வருடங்களாக உற்பத்தி குறைந்துள்ளது. சமீபகாலமாக நிலைமை மோசமாகியுள்ளது. இருந்தபோதிலும் காஷ்மீரில் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்துள்ளது என்று விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள். தேசிய சாஃப்ரான் (குங்குமப்பூ) மிஷன் 2010ல் நிறுவப்பட்டது. அதில் 1400ஹெக்டர் நிலத்தில் சாஃப்ரான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இத்ற்க்கு முக்கிய காரணம் புதிய தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன விதைப்பு நுட்பங்களை விவசாய்களுக்கு கற்பித்தலுமே முக்கிய காரணம் எனலாம். இதலால் பூக்களின் தரமும் சாகுபடியும் அதிகரித்துள்ளது. ஊதா பூக்களின் வாசமும் குங்குமபூக்களின் அதிகரிப்பும் சிறு வியாபரிகளுக்கு பெரும் முன்னேற்றத்தை அளித்து நளிவடைந்த காஷ்மீர் விவசாயிகள் தற்போது முன்னேற்றப் பாதையில் நோக்கி செல்லுவார்கள் என்று நம்பப்படலாம்.
எழுதியவர், எழுத்தாளர்
ஏ.யாஸ்மின் சென்னை . -MMH
Comments