பேராசையின் முடிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தவர் மணி வண்ணன். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப் பாக பணம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு பலரிடமும் முத லீடு திரட்டியுள்ளார். மேலும், இவர் நிறுவனத்தின் மூலம் மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவைக்கு விநியோக உரிமை தருவதாகவும், அதிக பணம் செலுத்தினால் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விநியோக உரிமை தருவதாகவும் தெரிவித்துள்ளார். சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண்ணிடம் வெளிநாடுகளில் சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் விநியோ கஸ்தர் உரிமை தருவதாக கூறி ரூ.63 லட் சத்தையும், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களிடம், தனது நிறுவ னத்தின் பங்குகள் மற்றும் விநியோகஸ்தர் உரிமை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ரூ. 2.82 லட்சத்தையும் மணிவண்ணன் வாங்கியுள்ளார். இதேபோன்று, குகை பகுதியைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் கார்த்திகேயன் என்பவர் ரூ.3.53 கோடி முதலீடு செய்துள்ளார். மேலும், சேலம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் சார்லஸ் என்பவரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவ தாகக் கூறி அவரிடம் ரூ.34.50 லட்சம் பெற்று, அதில் ரூ.7 லட்சத்தை மட்டும் திரும்ப அளித்து உள்ளார். இதுபோன்று, பலரிடம் பணம் பெற்ற மணிவண்ணன் அதற்கான பணப் பலனை வழங்கவில்லை எனவும் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை என்றும் புகார் எழுந்தது. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸ் விசார ணையில், மணிவண்ணணின் மோசடிக்கு அவரது மனைவி இந்துமதி, சகோதரர் ராம், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ் வதி, அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிவண்ணன், இந்துமதி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீ ஸார் கைது செய்தனர். மணிவண்ணனிடம் 350-க்கும் மேற்பட்டவர்கள் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதும், மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன் வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள் ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.                              -MMH


Comments