மோடி மேஜிக் சரிந்து வருகிறதா
கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அசுரத்தனமான வெற்றியைப் பெற்று பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. மோடி மேஜிக் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்து உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கு பின் முதல் முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலை பாஜக சந்தித்தது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் பாஜக வெற்றி பெறும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்று விட்டாலும், கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதே போல் காங்கிரஸ் மகாராஷ்ட்ராவில் 18 தொகுதிகள் கடந்த தேர்தலை விட அதிகம் பெற்று உள்ளது. அதே போல் ஹரியானாவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஏதாவது ஒரு கட்சியை கூட்டணிக்கு அழைத்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரசில் வளர்ச்சி அதிகமாகி இருப்பது மற்றும் அங்கு ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சி அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதும் பாஜகவின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் சக்சஸ் ஆன மோடி மேஜிக் ஆறே மாதங்களில் சரிய தொடங்கி உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உட்பட 17 மாநிலங்கள்... 51 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள்... பாஜகவுக்கு 19; காங்கிரஸுக்கு 12 டெல்லி: தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் 51 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக 19 தொகுதிகளையும் காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. மாநிலங்கள் வாரியாக இடைத்தேர்தல் முடிவுகள்: அருணாசலப் பிரதேசம் (1) சுயேட்சை - 1 அஸ்ஸாம் (4) பாஜக- 3 ஏஐயூடிஎப்-1 பீகார் (5) பாஜக - 2 ஜேடியூ- 1 மஜ்லிஸ் கட்சி- 1 சுயேட்சை -1 சத்தீஸ்கர்: (1) காங்கிரஸ்- 1 குஜராத்: (6) பாஜக - 3 காங்கிரஸ்- 3இமாச்சல பிரதேசம் (2) பாஜக- 2 கேரளா (5) சி.பி.எம் - 2 காங்கிரஸ்- 2 முஸ்லிம் லீக்- 1 மத்திய பிரதேசம் (1) காங்கிரஸ்- 1 மேகாலயா (1) யுடிபி- 1 ஒடிஷா (1) பிஜூ ஜனதா தள் -1 புதுவை (1) | காங்கிரஸ்- 1 பஞ்சாப் (4) காங்கிரஸ்- 3 அகாலி தள் - 1 ராஜஸ்தான் (2) காங்கிரஸ்- 1 ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி- 1 சிக்கிம் (3) பாஜக -2 | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1 தமிழ்நாடு (2) அதிமுக - 2 | தெலுங்கானா (1) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 1 உ.பி. (11) பாஜக -7 சமாஜ்வாதி- 2 பகுஜன் -1 -MMH
Comments