எல்லையில் தூங்கும் காவல் கடத்தல் கொண்டாட்டம்
தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்க்கு ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் ஆயில் கடத்தல். தமிழகத்தில் மக்களின் உணவு தேவைக்கு மாதந்தோறும் ரேஷன் கடை மூலம் இலவசமாக அரிசி மற்றும் மிக குறைந்த விலையில் ஆயில் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் அரிசி கிலோ 7ரூ முதல் 10ரூ வரைக்கும் மற்றும் ஆயில் 40ரூ முதல் 50ரூ வரைக்கும் விற்பனை செய்து விடுகின்றனர். அரிசி மற்றும் ஆயில்லை குறைந்த விலையில் பெறும் வியாபாரிகள் கேரளாவில் நடைமுறையில் உள்ள விலையில் விற்பனை செய்து விடுகிறார்கள் இதனால் அதிக லாபம் கிடைக்கும் என்பாதல் இதில் ஏராளமான இளைஞர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எல்லையான பொள்ளாச்சி அருகில் உள்ள சொமனபதி, கிழவன்புதூர், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புனி வழியாக நாள் ஒன்றுக்கு 10டன் முதல்15டன் வரை ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இந்த குற்ற செயல்கள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அதிகாரிகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் பேர்க்கு பிடித்து விடுவார்கள்.. இது ஒரு கண் துடைப்பு.. பின்பு கண்டு கொள்ளாமல் போய்விவார்கள். எல்லாம் காசு பணம் துட்டு வைத்தது வாய்க்கு பூட்டு போட்டு விட்டு சாவியை எடுத்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது மஃபியா கும்பல். கேரளா எல்லை என்பாதல் சர்வ சாதாரணமாக நடைபெறும் ரேஷன் அரிசி மற்றும் ஆயில் கடத்தல்க்கு துணையாக முக்கியப் பிரமுகர்களின் ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது, இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் அரசியல் முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆங்காங்கே பேசிக் கொள்கிறார்கள் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை மடக்கிப்பிடித்து கைது செய்கிறார்கள் ஆனால் இப்படி ஒரு பெரிய பின்னணி கொண்ட கும்பலை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை ஹானஸ்ட் ஆக, நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ள காவல் துறையில் இந்த கும்பலை பிடித்து தண்டனை வாங்கித்தர வருவார் என காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள்.
பொள்ளாச்சி
மக்கள் விழிப்புணர்வு அமைப்பு
பொறுப்பாளர்
M.சுரேஷ் குமார்
Comments