பொள்ளாச்சியில் பயங்கரம்
திவான்சாபுதூர் ஊராட்சி உட்பட்ட மினாட்சிபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சிமில் ஒன்று இயங்கி வருகிறது இந்த மில்லில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 18/07/2019 ம் தேதியன்று மஞ்சிமில்லில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த மஞ்சிமில்லிற்கு மிக மிக அருகில் சுமார் 500 மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் லட்சுமி வித்யாபவன் என்கிற தனியார் பள்ளியும். 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.. தீ விபத்தினால் பள்ளி பகுதி முழுவதும் மற்றும் குடும்பங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் மஞ்சிதுகள் கலந்து புகை சூழ்ந்து கொண்டது. அதனால் பள்ளியில் உள்ள மாணவர்கள் குழந்தைகள் ஆசிரியர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிப்பட்டு உள்ளர்கள் உயிர் சேதம் தவர்க்கப்பட்டது இந்த மஞ்சிமில்லில் ஏற்படும் மஞ்சி தூசி கழிவுநீர் மற்றும் கழிவுகள் ஆகியவை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் தொந்தரவாகவும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது... இந்த நிலையில் இந்த பகுதியில் வழ மக்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் அச்சம் மாக உள்ளது.. மஞ்சி மல்லின் கழிவு நீரை பூமிக்கடியில் நேரடியாக செலுத்திகின்றனர் இதனால் நிலத்தடி நிர் மாசு பட்டு அருகில் உள்ள வீடுகளில் ஆழ்துளை கிணற்றில் வரும் நீர் மாசு பட்டு வருகிறது... இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் இந்த விபரங்களை உயிர் திரு மாவட்ட ஆட்சியர் பர்வைக்கு கெண்டுசெல்லப்பட்டது. இது வரை எந்த விதமான நடவடிக்கை எடுக்க வில்லை என்பது வருத்தமன செய்தி. இதனையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், பயர் சர்வீஸ், தாசில்தார், வில்லேஜ் ஆபிஸ்,பஞ்சத்தை தலைவர், என இவர்கள் அனைவர்க்கும் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்கள் என்ன செய்ய இவர்கள் மனு காற்றில் பறந்து போனது.. இங்கு வசிக்கும் மக்கள் பெரிதல்ல இங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாத அதிகாரிகள் இந்த மஞ்சிமில்லை நிறுத்தி வைக்க எவர்க்கும் துணிவும் இல்லை அதிகாரமும் இல்லை எல்லாம் பணம் பேசுகிறது என்று சொல்லும் மக்கள். இப்படி மக்கள் மனதில் எண்ணம் தோன்ற யார் காரணம் இந்த எண்ணதற்க்கு விடை யார் சொல்லுவார்கள். மிக விரைவில் இதற்கு திர்வு இல்லை என்றால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடும் எம் ஜி ஆர் நகர மக்கள்.. இப்படி ஆவேசமாக கூறும் மக்கள் ஓரு புறமும். இந்த மில்லை நிரந்தரமாக மூடி எங்களையும் எங்க குழந்தை களையும் பாதுகாக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் இருகரம் கோர்த்து கும்பிடும் தாய்மார்கள்.
- பொள்ளாச்சி
நிருபர்
சுரேஷ் குமார்
Comments