வேலைவாய்ப்பு அலுவலகம்

கோவையில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. வரும் அக்.,18.ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், Professional Graduates, ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் மேலும், இதுபோன்ற அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. டிரைவர், பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை அனைத்து கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவருக்கு எந்தவித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தொடர்ந்து தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 18.10.2019 அன்று காலை 10.30 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறவுள்ள இத்தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையலாம் என கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.


Comments