காம லீலைகள்.கண்ட குழந்தைக்கு சூடு!?
வேலூர் மாவட்டம் அரியூரில், 2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை படுத்திய தாயின் காதலனையும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட தாயையும் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். தாயிடம் தனது 2 வயது குழந்தையை விட்டு அருகில் உள்ள செல்போன் கடையில் வேலைக்கு சென்று வந்த நிலையில், உடன் வேலை பார்க்கும் உதயகுமார் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த தகவல் அறிந்து, தாய் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். இதையடுத்து தாயிடம் இருந்து பிரிந்து தனியாக வீடு எடுத்து வசிக்க தொடங்கி இருக்கிறார் அந்த பெண். மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய் இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் வருகை, வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் காதலர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதையடுத்து. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை என்று பாராமல் அதனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர். அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய காதலன் உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமையைக் கண்டு மிரண்டு போயிருக்கின்றனர். குழந்தையில் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக, அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர். சிறுமியின் தாயை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், தப்பிச்சென்ற உதயகுமாரை 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர், போக்சோ சட்டத்தில் கைது செய்து உரிய விதத்தில் கவனித்தனர். குழந்தையிடம் அவர்கள் இருவரும் மிக கொடூரமாக நடந்து கொண்டதால் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டி கோவில்களிலும், கருத்தரித்தல் மையங்களிலும் பல தாய்மார்கள் காத்திருக்கும் நிலையில் பெற்ற குழந்தையை சிகரெட்டால் சூடுவைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்ய முயன்ற, சைக்கோ காதலனுக்கு உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட பெண், தாய்மையின் களங்கம்..!.
பாலியல், குடும்ப வன்முறை யில் பாதிக்கப்படும் பெண்கள் உதவிமைய ஊழியர்கள் நியமனம்: 1 மாதத்தில் முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | பாலியல், குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் உதவிமைய ஊழியர்கள் நியமனத்தை 1 மாதத்தில் முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம், காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, 15 மையங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-S.GIRI
Comments