பொண்டாட்டியை வைத்து சூதாடி கூட்டு பலாத்காரம்!
கட்டின பொண்டாட்டியை வைத்து சூதாடி உள்ளார் புருஷன். கடைசியில் சூதாட்டத்தில் தோற்று போனதால் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜகான்பூரில் வசித்து வந்துள்ளனர் ஒரு தம்பதி. இதில் கணவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லையாம். அதிலும் குடியும், சூதாட்டமும்தான் இவரது பிழைப்பாக இருந்திருக்கிறது. எப்போதுமே வீட்டிலேயே குடித்துவிட்டு சூது விளையாடுவாராம். இவருடன் இணைந்து விளையாடுபவர்கள் நண்பர் அருண் மற்றும் சொந்தக்காரர் அனில் என்வரும்தானாம். இப்படித்தான் சம்பவத்தன்றும் குடித்துவிட்டு சூதாட்டம் விளையாடி உள்ளனர். ஆனால் பணம் காலியானதால், தனது மனைவியை இருவரும் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். அதன்படி அவரது மனைவியை இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த பெண் அழுதுகொண்டே தனது மாமா வீட்டுக்கு பாதுகாப்பு தேடி சென்றார். இதனால் அதிர்ச்சியான புருஷன் காரை எடுத்து கொண்டு, அதில் அதே நண்பர்களையும் ஏற்றிக் கொண்டு மனைவியே பின்னாடியே போயிருக்கிறார். அழுது ஓடிய தனது மனைவியை வழிமறித்து சமாதானப்படுத்தி மீண்டும் காரில் ஏற்றி கூட்டி வந்திருக்கிறார். ஆனால் கொடுமை.. காரிலேயே நண்பர்கள் 2 பேரும் மீண்டும் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதை கணவனே அனுமதித்துள்ளார்.இதையடுத்து தன் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்த பெண், ஜாஃப்ராபாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டின் உதவியை நாடினார். இதற்கு பிறகுதான் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Comments