ஆபாச வீடியோ ! பெண் போலீஸ் ? டிராவல்ஸ் அதிபர்.....
ரெண்டு பேரும் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை வெளியிட போவதாக கூறி பெண் போலீஸ் மிரட்டுகிறார்" என்று டிராவல்ஸ் அதிபர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார். டிராவல்ஸ் அதிபரான இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே, இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில், பெண் போலீசுடன் கவிதா என்பவருடன் சதீஷுக்கு தகாத உறவில் ஈடுபட்டிருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அம்பலத்துக்கு வந்தன. கவிதாவும் கணவனைப் பிரிந்து வாழ்பவர் என்று கூறப்படுகிறது.மனுசிசிடிவி காட்சிகள் தொடர்பாக போலீசார் விசாரித்த போது இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். எனினும், கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, இந்த விவகாரமும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சதீஷ்குமார் கோவை மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ள சுருக்கம் இதுதான்: அறிமுகம்"எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் சூலூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். அவர் மூலம்தான் பெண் போலீஸ் எனக்கு அறிமுகம் ஆனார். இந்த விஷயம் என்னுடைய மனைவிக்கு தெரிய வந்ததால் குழந்தையுடன் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் பெண் போலீசுடன் நெருக்கமாக இருந்தேன். அவரை ஊட்டி, மைசூரு, திருநள்ளாறு, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்றேன்.அத்திவரதர்கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அழைத்துச் சென்றேன்.அத்திவரதர்கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அத்திவரதர் தரிசனத்துக்கு பெண் போலீஸ் தனது போலீஸ் அடையாள அட்டையை காண்பித்து என்னை அத்திவரதரின் அருகில் தரிசனத்துக்கு அழைத்துச்சென்றார். எனது அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. நான் பெண் போலீசுடன் உல்லாசமாக இருந்தபோது எனது அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவை பெண் ஊழியர், பெண் போலீசிடம் கொடுத்துள்ளார்.வீடியோ இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று பெண் போலீசும், அவரது தோழியும் என்னை மிரட்டினார்கள். வீடியோ வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்றனர். நாங்கள் உல்லாசமாக இருந்த விடியோவை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி யூடியூப்பில் வெளியிட்டனர்.கருமத்தம்பட்டி இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அந்த பெண் போலீஸ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டனர். சீருடையுடன் இருந்துகொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்ததால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆபாச வீடியோ அதன் பின்னரும் இன்னும் 2 ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை என்னுடைய மனைவி உள்ளிட்டவர்களிடம் கொடுக்க போவதாகவும், சமூக வலைத்தளத்தில் வெளியிட போவதாகவும் மிரட்டினார். இதுவரை பெண் போலீஸ் ரூ.3 லட்சம் வரை பறித்துக்கொண்டார். தற்போது அந்த பெண் போலீஸ் கோவையில் ஆயுதப்படையிலும், தோழி சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
P.VENGADESH
Comments