திராவிட கட்சிகளுக்கு சவால்!
அதிமுக, திமுகவின் ஓட்டுக்களை தீபலட்சுமி பிரித்துள்ளார் என்பதுதான் வேலூர் தேர்தல் மறைமுகமாக நமக்கு சொல்லும் செய்தி! சீமானுக்கு 2 விதமான துணிச்சலே நாம் தமிழர் கட்சியை மேலே தூக்கி நிறுத்த காரணமாக அமைந்துள்ளது. ஒன்று, யாருமே செய்யாத "பாதிக்கு பாதி" ஆண்-பெண் வேட்பாளர்களை களமிறக்கியது, மற்றொன்று, யாருமே முன்பின் அறிந்திராத புதுமுகங்களை களத்தில் இறக்கியது. இந்த இரண்டு காரியத்தையும், எந்த பிரதான கட்சிகளுமே செய்யவில்லை என்பதே உண்மை . இப்படி ஒரு ரிஸ்க் எடுத்துதான் களத்தில் இறங்கினார் சீமான். அதனால்தான் அரசியல் கட்சிகள் வரிசையில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இப்போதும் அப்படித்தான் தீபலட்சுமியை வேட்பாளராக அறிவித்தார். நியாயமாக, நேர்மையாக, ஒத்த பைசா கொடுக்காமல், 26,995 வாக்குகளை முழுசாக பெற்றுள்ளார் தீபலட்சுமி.தீபலட்சுமிஏசி சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழை வாய்ப்பை தவற விட்டுள்ளபோது, தீபலட்சுமியின் இந்த வாக்கை நாம் பெரிதாக பார்க்க வேண்டி உள்ளது. அது மட்டுமில்லை . இது திமுக தரப்புக்கும் சற்று தளர்வுதான். இழுபறி வெற்றி அடைந்துள்ள திமுக, தீபலட்சுமி பெற்றுள்ள இந்த வாக்கு அளவினை கவனிப்பது மிகுந்த அவசியமாகிறது.ஐடி ஊழியர்கள் இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை . இதற்கு முக்கிய காரணம், தமிழ் தேசியத்தை ஒவ்வொரு வீதியிலும் சென்று முழங்கினார் தீபலட்சுமி. இதற்காக தொகுதியில் இறங்கி ஒத்துழைத்த சென்னை, பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கும் இந்த கட்சி நன்றி சொல்வது முக்கியம். சீமானின் பேச்சுஅது மட்டும் இல்லை . திமுக, அதிமுகவுக்கு நட்சத்திர பேச்சாளர்களோ, அல்லது முக்கிய தலைவர்களோ, பிரமுகர்களோ பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த கட்சிக்கு ஸ்டார் பேச்சாளர், பிரமுகர், தலைவர், எல்லாமே ஒத்த மனுஷன் சீமான்தான். இந்த தொகுதியில் மொத்தம் 10 கூட்டங்களில் பேசினார். 10- கூட்டத்திலும் இவர் பேசியது நிச்சயம் மக்கள் காதில் விழுந்திருக்கவே செய்கிறது. மீடியா"எங்களை டிவியில காட்டறதே இல்லை. நாங்க பேசிறதை ஒளிபரப்புறது இல்லை.. நாம் தமிழர் கட்சியினரை மீடியாக்கள் இருட்டடிப்பு செய்கின்றன" என்று சீமான் புலம்பி வந்த நிலையில், அவரது அசாத்திய வளர்ச்சி ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக... திமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிக்க நாம் தமிழர் கட்சி மிக வேகமாக தயாராகி பட்டைய கிளப்பி வருகிறது என்பதுதான் வேலூர் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை !
N.SUBRAMANIYAN
Comments