பணப்புழக்கம் அடியோடு சரிந்தது!!!?.
கோவை: உற்பத்தி செய்த பொருட்களை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. இதனால் பொருட்கள் தேங்கியதால் சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வங்கிகளின் கருப்பு பட்டியலில் சேர்ந்துள்ளார்கள். இதன்காரணமாக மேற்கொண்டு கடன் வாங்க முடியாததால் தொழிலை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பல்லாயிரம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. சுமார் 5லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பெரிய நிவனங்களின் கார்கள், டூவிலர், 4 வீலர்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கோவை மற்றும் சென்னையில் நிறைய காணப்படுகின்றன.! தொழிலாளர்கள் பாதிப்பு ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் , இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் விற்பனை சரிவால் உற்பத்தி செய்வது குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் குறிப்பிட்ட நாள்கள் கட்டாய விடுமுறை அளித்து வருகின்றன சிறுகுறு நிறுவனங்கள். . இதனால் வாங்கும் சொற்ப சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடனை அடைக்க முடியவில்லை குறைவான உற்பத்தி காரணமாக ஆர்டரும் குறைந்ததால் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாலும் அவதிப்பட்டனர். தற்பது தொடர்ந்து 3 மாதங்கள் கடனை கட்டாததால் வங்கிகளின் கருப்பு பட்டியலில் பலர் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மேற்கொண்டு கடன் வாங்க முடியாத நிலையில், தொழிலை காரணமாக மேற்கொண்டு கடன் வாங்க முடியாத நிலையில், தொழிலை மேற்கொண்டு விரிவுபடுத்த முடியாமல் தொழில் அதிபர்கள் தவித்து வருகிறது. இதனால் கோவையில் ஆட்டோ மொபைல் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் அதில் வேலை பார்த்தோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களிடம் பணம் இல்லாத காரணத்தால் மக்களுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லாமல் போனது. பணப்புழக்கமும் அடியோடு குறைந்தது. இதனால் பெரும்பாலான துறையில் விற்பனை சரிந்தது. இதனால் உற்பத்தி குறைந்து. பலர் வேலை இழந்தார்கள். மத்திய அரசு தலையிடணும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. மத்திய அரசு உடனே தலையிடா விட்டால் தமிழகத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அடியோடு அழியும் என்றும் சுமார் 5லட்சம் பேர் வரை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக துறை சார்ந்தோர் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் தமிழகத்தில் தான் ஆட்டோ மொபைல் துறையில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன.
-MMH
Comments