கோவையில் கத்தி, அரிவாளுடன்! ரவுடிகள்!!!?

கோவையில் கத்தி, அரிவாளுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டியவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். கத்தி, அரிவாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அந்தப் புகைப்படங்களை வைத்து, அதில் உள்ளவர்கள் யார், எங்கு அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், புகைப்படத்தில் உள்ளவர்களில் 2 பேர் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது கோவை மாநகர காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிவானந்தபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (27), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (40) ஆகியோரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர். கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தில் உள்ள மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கோவையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ரவுடிகள்  கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் முதல்முறையாக அரங்கேறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


                                                                                                                                                       -MMH


Comments