புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்
ஒரு லட்சம் வரை அபராதம்' - புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் அடுத்து மாநிலங்களவையில் இன்று அது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருத்தப்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. விரைவில் அமலாக உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் என்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன? பார்ப்போம். வாகன ஓட்டிகள் இழைக்கும் சிறிய தவறுகளுக்கான அபராதம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. உரிமம் இன்றி ஓட்டுபவர்களுக்கு அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது கட்ட வேண்டியுள்ள நிலையில் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. பெர்மிட் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது விதிக்கப்படும் நிலையில் அது இனி 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்கிறது. காப்பீடு இன்றி ஓட்டும் பட்சத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் அது இனி 2 ஆயிரம் ரூபாய் ஆகிறது. 2 சக்கர வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் தற்போது 100 ரூபாய் மட்டுமே அபராதமாக உள்ளது. ஆனால் அது 2 ஆயிரம் ரூபாயாக உயர்வதுடன் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்தும் செய்யப்படும். சிறார் வாகனம் ஓட்டும் போது அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதுடன் 3 ஆண்டு சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இது வாகனத்தை ஓட்டிய சிறுவன் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். பல்வேறு விதமான வாகன விதிமீறல்களில் ஈடுபடும் போது அதற்கு இனி 25 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
Comments