நிலாவில் மனிதன் கால் பதித்த

நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவர் கால் பதித்து 19 நிமிடங்களுக்கு பிறகு, 2வது மனிதனாக, பஸ் ஆல்டிரின் நிலவில் கால் பதித்தார். ஆம்ஸ்ட ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் , சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி திரிந்து, 21 கிலோ எடை கொண்ட நிலவில் இருந்த கற்களை சேகரித்தனர். மனித வரலாற்றின் முக்கிய சாதனையின் அரை நூற்றாண்டு கடந்ததை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தமது முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளது. நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை ஆய்வு செய்ததில், 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் எரிமலை வெடித்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வரும் 22ஆம் தேதி இந்தியா தமது சந்திராயன் 2 ஐ., நிலவுக்கு அனுப்புகிறது. சந்திராயன் 2, நிலவில் இறங்கி ஆய்வு செய்யப்பட உள்ளதை காண, விஞ்ஞானிகளும், ஓட்டு மொத்த தேச மக்களும் ஆவலுடன் உள்ளனர்.


Comments