5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது வோடபோன் நிறுவனம் இங்கிலாந்தின் 7 நகரங்களில் வோடஃபோன் நிறுவனம் 5ஜி சேவையை 5ஜி 5ஜி

 இங்கிலாந்தின் 7 நகரங்களில் வோடஃபோன் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கியது.4ஜி தொழில்நுட்பத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 5ஜி தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் தென்கொரியா 5ஜி தொழில்நுட்ப சேவையை அம்மக்களுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் 2020ம் ஆண்டிற்குள் தங்கள் மக்களிடம் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தின் க்ளாஸ்கோ, லண்டன், மான்செஸ்டர், லிவர்பூல், பிர்மிங்ஹாம், கர்டிஃப் மற்றும் ப்ரிஸ்டால் ஆகிய 7 நகரங்களில் வோடஃபோன் நிறுவனம் 5ஜி சேவையை இன்று அறிமுகப்படுத்தியது.4ஜி தொழில்நுட்பத்தில் அதிவேக இணைய சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் அதைவிட அதிகமான வேகத்தில் இணைய சேவையை பெற முடியும். மேலும், மூன்று அன்லிமிடட் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் வோடஃபோன் 4ஜிக்கு பெறும் அதே கட்டணத்தையே 5ஜி தொழில்நுட்பத்திற்கும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிட்டட் டேட்டா திட்டத்தை அதிகபட்சமாக £30-யில் பெறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்நிறுவனம் 3 விதமான அன்லிமிட்டட் பயன்பாட்டு திட்டங்களை அறிமுகபயன்படுத்தியுள்ளது30 (30 pound) கட்டணம் செலுத்தி அதிகபட்ச அறிமுகபயன்படுத்தியுள்ளது30 (30 pound) கட்டணம் செலுத்தி அதிகபட்ச வேகத்தில் இணைய சேவையையும், அன்லிமிட்டட் டேட்டாவையும் பெறலாம்.மற்றொரு அன்லிமிடட் திட்டமானது அதிகபட்சமாக 10 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை மாதத்திற்கு £26 என்ற கட்டணத்தில் வழங்குகிறது.மாதத்திற்கு £23 கட்டணம் செலுத்தும் அன்லிமிட்டட் லைட் என்ற திட்டத்தின் மூலம் 2 எம்பிபிஎஸ் வேக இணைய சேவையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் ஹோமி மிக்ஸ் 3 ஆகிய மொபைல் போன்கள் 5ஜி தொழில்நுட்பத்தை பயனாளர்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் பலகோடி பேரிடம் இன்னும் 4ஜி - தொழில்நுட்பமே சென்றடையாத நிலையில் 5ஜி தொழில்நுட்பம் எப்போது இங்கு அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் வோடஃபோன் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments