சொந்த ஜாமீனில் விடுதலை செய்த நீதிபதி..!

இந்த இளைஞர் செய்தது தவறே இல்லை..! சொந்த ஜாமீனில் விடுதலை செய்த நீதிபதி..! திருவாரூர் மாவட்டம் தேவர் கண்ட நல்லூரில் மது விற்பனைக்கு எதிராக போராடி, விளம்பர பதாகை வைத்ததாக கைது செய்யப்பட்ட இளைஞரை தனது சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளார் நீதிபதி. திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது தேவர்கண்டநல்லூர் இந்த இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த ஊர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் இது "தமிழ்நாடு குடிகார நாடா" என்ற தலைப்பில் பதாகைகளை தயார்படுத்தி ஆங்காங்கு வைத்துள்ளனர். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், கொரடாச்சேரி காவல்துறையினர் இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது குறித்த விசாரணை நடத்திய நீதிபதி சட்டவிரோதமாக மதுபானம் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது குறித்த விசாரணை நடத்திய நீதிபதி சட்டவிரோதமாக மதுபானம் விற்றதற்கு எதிராக பதாகை வைத்தது தவறா? என காவல்துறையினருக்கு கேள்வி எழுப்பினார். மேலும் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் செல்லபாண்டியன் என்பவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என காவல்துறையினருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி, தன் சொந்த ஜாமீனில் செல்ல பாண்டியனை விடுவித்தார். நீதிபதியின் இந்த செயலுக்கு மக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


Comments