நிர்வாணமாக நின்ற?

திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள். கோவையில் பரபரப்பு.! கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சமையல், குடிசைத் தொழில் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சமூகத்தில் கௌரவமாக பலர் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு சிலர் தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பணம் வசூலித்தும் வருகின்றனர். இந்த சூழலில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் வளாக துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இரு திருநங்கைகள் வந்திருந்தனர். அப்போது விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் நீண்ட நேரமாக பணம் கேட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவர் பணத்தை தராத காரணத்தினால், அவரது சட்டைப்பைக்குள் கையை விட்டு இருந்த 10,000 ரூபாயையும் பறித்து கொண்டனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர், அந்த திருநங்கையரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அந்த திருநங்கைகள் திடீரென தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக சாலையில் நின்றனர். இது அத்தனையும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றதால், அதிர்ச்சி அடைந்ததுடன், முகம் சுளிக்கவும் வைத்தது. ஆனால் அந்த நபர் விடாமல் தனது பணத்தை தருமாறு கேட்டு கொண்டே இருக்கவும், கடைசியாக எடுத்த பணத்தை திருநங்கையர் திரும்ப கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் திருநங்கைகள், சமூகத்தில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள், முயன்று படிக்கிறார்கள், தங்களை இந்த சமூகத்தில் போராடி நிலைநிறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், இது எல்லாவற்றையும் இழிவுபடுத்துவது போல ஒரு சிலர் இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது சங்கடத்தையும், கவலையையும் தந்துள்ளது.


Comments