காவல்துறையினர் இல்லை?

 


 


 


 


 


தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு- வீடியோ சென்னை : 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது கலவையான கருத்துக்களைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வலம் வருகிறது. இப்படி விடிய விடிய கடை திறந்து வைக்கலாம் என்று யார் ஐடியா கொடுத்தது என்று கேட்டு ஜாலியாக பல கேள்விகளையும் கேட்டுள்ளனர். அதை நீங்களும் படிங்க... நைட்டு கடை திறந்தா பொருளாதாரத்துல தமிழ்நாடு பிச்சுக்கும்ன்னு யாரு ஐடியா கொடுத்ததுன்னு தெரியல, சொன்ன பய இதையெல்லாம் சொன்னானான்னும் தெரியல. நைட்டு கடைய அடைக்க சொல்றதே, மொள்ளான், முடிச்சவிக்கி நடமாட்டம் தனியா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான். இந்த சட்டத்துனால, மக்கள் நடமாட்டமும் இருக்கும், அப்புறம் நைட்டு நடமாடறவன் பொதுமக்களா இல்ல திருட்டு கபோதியான்னு எவனுக்கு தெரியும். நைட் பீட் பாக்கற போலீசுக்கு தெரியும், பதினோரு மணிக்கு மேல டாஸ்மாக் கூட்டம் முடிஞ்சது, ஒன்ரைக்கு மேல் சினிமா கூட்டமும் முடிஞ்சது அதுக்கு மேல யாரு வந்தாலும் போலீஸ் சந்தேகப்பட்டு விசாரிக்கலாம், இந்த நேரத்துல இங்க என்ன வேலைன்னு ? சேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்! இனி விசாரிக்க முடியாது. "எங்கம்மா கால் கிலோ பருப்பு வாங்கியாரச் சொன்னுச்சு" "தூக்கம் வரல, சும்மா டீ சாப்பிட்டு பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தோம்" "வீட்டுல அருவா, கத்தியெல்லாம் இல்ல, காலைல சமைக்க செய்ய வாங்கிட்டு போறேன் சார்" இதுதான் பதிலா இருக்கும், போலீஸ் கேட்டுதான் ஆகணும், இல்லன்னா செல்போன்ல கேமிராவ ஆன் பண்ணுவான் தேவையா ? இனி இந்த உத்திரவால் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறதோ இல்லையோ, குற்றங்கள் கண்டிப்பாக வளர்ச்சி அடையும், காவல்துறை எப்.ஐ.ஆர் வேணும்னா போடும் மற்றபடி எதுவும் செய்ய முடியாது. காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் காவல்துறையினர் இல்லை. ஏழரை கோடி பேரின் பாதுகாப்புக்கு காவல்துறையினர் வெறும் ஒரு லட்சம் பேர்தான்! நியாயமான கேள்விகள் நிறையவே இருக்கு.. பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அரசு போதிய அளவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.


Comments