யோகி, முட்டாள்தனமாக

புதுடில்லி: உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் குறித்து, சமூக வலைதளத்தில் ஆட்சேபகரமான செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநில அரசுக்கு , உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து காங். தலைவர் ராகுல் கூறியது, தங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், பொய் செய்தி வெளியிட்டதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைக்க, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., முயன்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்ற ஆள் இருக்க மாட்டார்கள். உத்தர பிரதேச முதல்வர் இந்த விஷயத்தில், முட்டாள்தனமாக நடந்துள்ளார் என்றார்.


Comments