போதை நகரமாக மாறும் கோவை
வேலை வாய்ப்புகளுக்கு பெயர் போன கோவையில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவை சுற்றி மலைப்பிரதேசங்கள் அதிகமாக உள்ள காரணத்தினால் சமூக விரோத கும்பல் அது தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பல போதைவஸ்துக்களை பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது இந்த போதை கும்பல் குறிப்பாக கஞ்சா எனும் போதை பொருளை அதிகமாக கோவை சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக ஆதாரப்பூர்வமான தகவல் வருகிறது இவர்கள் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க பல யுத்திகளை கையாளுவதாக மேலும் பரபரப்பான தகவல் வெளியாகிறது காவல்துறையும் இவர்களைப் பிடிக்க தனிப்படை போன்ற மும்முரமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆனாலும் கூட இவர்கள் சிக்குவது கிடையாது இந்த கஞ்சா கும்பல் குறிப்பாக பழைய கைதிகள் மற்றும் குற்ற வழக்குகளில் சிறை சென்று வரும் நபர்களை வைத்து இந்த தொழிலை செய்து வருவதாக கஞ்சா வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள் மேலும் கோவை மாநகரில் இதுபோன்ற கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை பிடிக்க காவல்துறை பழைய குற்ற ஈடுபடும் சமூக விரோதிகளை பிடிக்க காவல்துறை பழைய குற்ற வழக்குகளில் விடுதலையாகி வெளியில் சுற்றும் நபர்களை பிடித்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை .
Comments