சுர்ஜித் இறப்பில் உள்ள எட்டு கேள்விகள்

எட்டு என்னுடைய கேள்விகள். MM ஹாரூன். பொதுச் செயலாளர் மக்கள் விழிப்புணர்வு அமைப்பு 1.கடைசி நாள் குறிப்பிட்ட அரசு அதிகாரிகளை தவிர குழந்தை விழுந்த கிணற்றை சுற்றி போடப்பட்டிருந்த கூடாரத்திற்கு அருகே வேறு யாரையும் அனுமதிக்காதது ஏன்? 2.குழந்தை இறந்துவிட்டது என தெரிந்த அடுத்த 3 மணி நேரத்தில் உடல் எப்படி அழுகியது? இல்லை குழந்தை எத்தனை நாட்களுக்கு முன் இறந்தது? 3.குழந்தை இறந்தது என தெரிந்ததும், குழந்தை விழுந்த கிணற்றின் துளை வழியாகவே எப்படி (எந்த உபகரணம் கொண்டு) அழுகிய உடலை 2 மணி நேரத்தில் எடுக்க முடிந்தது. 4.வெளியே எடுத்தது குழந்தையா? இல்லை நீங்கள் ஜோடித்த வேறு ஏதாவதா? 5.குழந்தையின் அழுகிய சடலம் என நீங்கள் வெளியே கொண்டு வந்ததை ஏன் யாராலும் பார்க்க முடியவில்லை ? 6.பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்ற தாய்க்கூட பார்க்க முடியாத படி மூடி கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? 7.ஒரு பக்கம் பிரேத பரிசோதனை நடக்கும் பொழுதே மறுப்பக்கம் விறுவிறுப்பாக குழந்தை விழந்த கிணற்றை மூடுவதற்கான காரணம் என்ன? 8.வீட்டிற்கு கொண்டு வந்த குழந்தையின் மூடப்பட்ட சடலத்தை 2 மணி நேரம் கூட அஞ்சலிக்கு வைக்காமல், அதிகாரிகள் அருகிலே இருந்து புதைத்ததிற்கான காரணங்கள் என்ன? இவை அனைத்தும் எத்தனை நாளாக தீட்டப்பட்ட திட்டம்? இரவு 11.30 வரை தொலைக்காட்சியில் 55 அடிவரை தோண்டியிருப்பதாகவும், இன்னும் 35 அடி தோண்ட #12_மணி நேரம் வரை ஆகலாம் என்பதும் செய்தியாக இருந்தது. (அந்த 55 அடியை தோண்ட 4 நாள் ஆனது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.) அதைவிட, 100 அடி தோண்டுவதை காட்டிலும் #சவாலான காரியம் எந்த உபகரணமும் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை நெருங்குவது என்பதே முக்கிய செய்தியாக இருந்தது. திடீரென்று இரவு 11.30 மணிக்கு எல்லா சேனல்களிலும் #லைவ் செய்வது #நிறுத்தப்படுகிறது. 2.30 மணிக்கு துர்நாற்றம் வருவதாக வந்த செய்தி, விடிகாலை 4.30க்கு குழந்தை உயிரற்ற உடலாக மீட்கப்பட்டது என ஒரு ப்ளாஸ்ட்டிக் பை காண்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இப்ப #எழும் சந்தேகங்கள் 1. திடீரென லைவ் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது ஏன்?? 2. நான்கு நட்களாக 60 அடியே தோண்ட முடிந்த நிலையில் , அடுத்த 3 மணி நேரத்தில் முழுவதும் தோண்டியது எப்படி?? 3. பக்கவாட்டில் துளையிடுவது சவாலான காரியம் அவ்ளோ லேசுல முடியாது என்று அறிவித்த நிலையில், அதுவும் உடனே சாத்தியமானது எப்ப டி??


Comments