குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தனது 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது. மற்றும் அதன் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தையும் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. உலகம் முழுவதிலுமிருந்து குமரகுரு கல்வி நிறுவனங்களின் 700 முன்னாள் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். எழிலரசி, முன்னாள் மாணவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், குமரகுரு கல்வி நிறுவனங்களின் பிரசிடென்ட் சங்கர் வானவராயர் மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில் குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம், இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் ரூ.2.5 கோடி சிறப்பு மானியத்துடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையம் அடிப்படை ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு, சோதனை மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, குறு, சிறு மற்றும...